அரசு பள்ளியில் கலைப்பொருட்கள் கண்காட்சி
அரசு பள்ளியில் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ தலைமை தாங்கினார். இந்த கண்காட்சியை சிவகங்கை தேர்தல் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் திறந்து வைத்து பார்வையிட்டார். அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா கண்காட்சி பொருட்களை வடிவமைத்த மாணவர்களை பாராட்டினார். மேலும் அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
Related Tags :
Next Story