அரசு பள்ளியில் கண்காட்சி
வந்தவாசியை அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவள மையம் சார்பில் முத்தமிழ் சாரல் என்ற தலைப்பில் தமிழ் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மங்கவரதாள் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர சீனிவாசன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் உமா வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக, வழக்கறிஞர் மணி பங்கேற்று, தமிழும் தொன்மையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் தமிழ் கண்காட்சி அரங்கில் அமையப் பெற்ற திருக்குறள் ஆய்வு மையம், புறநானூறு செய்தி தொகுப்பு, இயற்கை உணவுகள், 5 வகை நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story