ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பாரம்பரிய பயிர் வகைகள் கண்காட்சி
கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பாரம்பரிய பயிர் வகைகள கண்காட்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் வளாகத்தில் அட்மா திட்டத்தின் கீழ்பாரம்பரிய ரகங்கள் பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, வேளாண்மை கல்லூரி முதல்வர் தானுநாதன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ரத்தினசபாபதி ஆகிேயாா் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் கலந்து ெகாண்டு கண்காட்சிைய ெதாடங்கி ைவத்து ேபசினாா்.
கண்காட்சியில் விவசாயிகள் சாகுபடி செய்த தனித்துவமான பல்வேறு ரக பாரம்பரிய பயிர் வகைகளை விரும்பத்தக்க குணாதிசயங்களுடன் காட்சிப்படுத்தினர்
அரசு வேளாண்மை திட்டங்களில் கலை நிகழ்ச்சியும் பாரம்பரிய பயிர் வகைகளை பற்றி நாடகம் மூலமாகவும் விளக்கினார்கள். இதில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சி துறை போன்ற துைறகளை ேசா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிைய வேளாண்மை துணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை அலுவலர் (ஆட்மா) திலகவதி தொகுத்து வழங்கினா்.