பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி


பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி
x

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்

கண்காட்சி

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினர்.‌‌ தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது:-

பாரம்பரிய நெல் விதைகள்

இந்த கண்காட்சியில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் உயர்தர உள்ளுர் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வரும் மற்றும் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் வினியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் தூயமல்லி, கருப்புக் கவுனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

50 சதவீத மானியம்

இந்த பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.25 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ விதை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அக்கண்டராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள், குருக்கத்தி அரசு வேளாண் கல்லூரி மாணவ,மாணவிகள், வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story