அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கண்காட்சி
நாகையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கண்காட்சி நடந்தது.
நாகையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மத்திய மக்கள் தொடர்பாக மண்டல அலுவலர் சஞ்சய் கோஸ், மக்கள் தொடர்பாக அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் வாழ்க்கை குறிப்புகள் புகைப்படத்துடன் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் சுதந்திரத்தின் வரலாறுகள் குறித்து பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினாா். இந்த கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.