சீனாவில் இருந்து வந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா:இளம்பிள்ளை உழவர்சந்தையில் விவசாயிகளுக்கு பரிசோதனை


சீனாவில் இருந்து வந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா:இளம்பிள்ளை உழவர்சந்தையில் விவசாயிகளுக்கு பரிசோதனை
x

சீனாவில் இருந்து வந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இளம்பிள்ளை உழவர்சந்தையில் விவசாயிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம்

இளம்பிள்ளை,

மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி, சீனாவுக்கு சென்று விட்டு சொந்த ஊர் திருப்பி உள்ளார். கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜவுளி வியாபாரி வசிக்கும் தப்பாக்குட்டை பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜவுளிவியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முன்னதாக கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பு, சீனாவில் இருந்து திரும்பிய ஜவுளி வியாபாரி இளம்பிள்ளை உழவர் சந்தைக்கு வந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் இளம்பிள்ளையில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று அங்கிருந்து விவசாயிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டன.


Next Story