பா.ஜ.க.வினர் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்


பா.ஜ.க.வினர் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வினர் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் நகர பா.ஜ.க. சார்பில் மததிய அரசின் 9ஆண்டு கால திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் நகர தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராம்மோகன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் மணிகண்டன், ஒன்றிய மகளிரணி தலைவி முத்துலட்சுமி, கிளைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதேபோன்று, உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வீடு வீடாக சென்று நடந்த பா.ஜ.வினரில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்கு கிளைத்தலைவி யோகராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேர்மலிங்கம், ஒன்றிய பொதுச்செயலர் சின்னத்துரை, ஒன்றிய மகளிரணித் தலைவி தமிழ்செல்வி மற்றும் பலர் வீடு வீடாக சென்று மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பிரசாரம் மேற்கொண்டனர். குலசேகரன்பட்டினம் அண்ணாசிலை பகுதியில் ஒன்றிய துணைத்தலைவி வசந்தி தலைமையில் பா.ஜ.க.வினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர்.


Next Story