போலீஸ் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம்


போலீஸ் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம்

விருதுநகர்


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா உத்தரவின் பேரிலும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுலோஜனா ஆலோசனையின் பேரிலும் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராவ்பகதூர் உயர்நிலைப்பள்ளி, சவுடாம்பிகை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 285 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேற்கண்ட மாணவ-மாணவிகள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு போலீஸ் துறை செயல்பாடு குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. பின்னர் சட்டம் மற்றும் பிற தீர்வுகள் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பரிசு வழங்கினார்.


Related Tags :
Next Story