2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் ஆய்வு


2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் ஆய்வு
x

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 32 மீன்பிடி கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளை மீன்வள துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை

நாட்டுப் படகுகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 32 மீன்பிடி கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. இந்த படகுகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் மீன்வள துறை இணை இயக்குனர் சர்மிளா தலைமையில் திண்டுக்கல் மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தர பாண்டியன், புதுக்கோட்டை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் 10 அணிகளாக பிரிந்து 32 கிராமங்களில் உள்ள2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு சாதனங்கள்

இந்த ஆய்வின் போதுபடகுகளின் பதிவு எண் மற்றும் படகு தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நல்ல நிலையில் இல்லாத படகுகளை உடனே சரி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், படகுகளில் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


Next Story