கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்கள் ஆய்வு


கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்கள் ஆய்வு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வு

தூத்துக்குடி முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலா துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை இயக்குநர் சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் கடல் சாகச விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடல் சாகச விளையாட்டுக்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி நேற்று துறைமுக கடற்கரை பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுலர்கள் உடன் இருந்தனர்.


Next Story