கள்ளக்குறிச்சி பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்து ?- விசாரணையில் வெளியான தகவல்
வெடி மருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.
சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில் வெடி மருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.தற்போது அது கருஞ்சிரகம் என் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
வெடி மருந்து கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்து? -விசாரணையில் வெளிவந்த 'திடுக்' தகவல்#Kallakurichi | #kaniyamoor | #kallakurichicase | #Srimathicase | #ThanthiTV https://t.co/J1K8HaVUkC
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2022