ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி முகாம்
ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி முகாம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்து பயிற்சி முகாம் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள நறுமண பூங்கா அலுவலகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது. தொழில் முனைவோர் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பமுடைய குறுசிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய விரும்புபவர்கள் புகைப்படம், தொழில் முனைவோர் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் கோ.புதூர், தொழிற்பேட்டை, மதுரையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.