திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 100 டன் பூக்கள் ஏற்றுமதி


திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 100 டன் பூக்கள் ஏற்றுமதி
x

ஓணம் பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 100 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

திண்டுக்கல்

கேரளாவில் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ வியாபாரிகள் சங்க செயலாளர் சகாயம் கூறும்போது, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் அத்தப்பூ கோலமிடுவது முக்கிய இடத்தை பிடிக்கும். இதையொட்டி கேரளாவில் உள்ள வியாபாரிகள், திண்டுக்கல்லுக்கு வந்து தங்கி தினமும் பூக்களை வாங்கி அனுப்புவார்கள்.

அதன்படி இதுவரை சுமார் 100 டன் பூக்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் தினமும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். மேலும் கேரளாவுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி ஆவதாலும், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி இங்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றார்.


Next Story