வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பனங் கிழங்குகள்


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பனங் கிழங்குகள்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் பனங்கிழங்குகள் விளைச்சல் அமோகமாக உள்ளதால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் பனங்கிழங்குகள் விளைச்சல் அமோகமாக உள்ளதால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பனங்கிழங்குகள்

கருப்பட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடியில் பனங்கிழங்கு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. செம்மணல் தேரியில் குறைந்த தண்ணீரிலும் செழிப்புற்று வளரும் பனங்கொட்டைகளை பலரும் தங்களது விவசாய நிலங்கள், வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு பின்னரும் பனங்கிழங்குகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கும் பனங்கிழங்குகளை அனுப்பி வருகின்றனர்.

ஏலக்கடைகள்

உடன்குடியில் உள்ள ஏலக்கடைகளிலும் பனங்கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி, வாகனங்களில் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.

தரம்வாய்ந்த பனங்கிழங்குகளை சாக்குப்பைகளில் அடைத்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் உடன்குடி பகுதியில் பனங்கிழங்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உடன்குடி ஏலக்கடைக்காரர்கள் கூறியதாவது:-

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

உடன்குடி பகுதியில் விளைவிக்கப்படும் பனங்கிழங்குகளை விவசாயிகள் ஏலக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அவற்றை தினமும் மாலையில் கிலோக்கணக்கில் ஏலம் விட்டு விவசாயிகளுக்கு உரிய பணத்தை உடனே வழங்கி விடுவோம். பனங்கிழங்குகளை தரம் வாரியாக ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரையிலும் கொள்முதல் செய்கிறோம்.

பின்னர் அவற்றை தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் தேவைக்கு தகுந்தாற்போன்று ஏற்றுமதி செய்கிறோம்.

உடன்குடி பகுதியில் இருந்து தினமும் சுமார் 2 ஆயிரம் கிலோ பனங்கிழங்குகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story