தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக சென்டிரல் - பித்ரகுண்டா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
மறுமார்க்கமாக பித்ரகுண்டாவில் இருந்து அதே தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17237) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திரா மாநிலம் விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவதால், சென்னை சென்டிரலில் இருந்து நாளை முதல் செப்டம்பர் 24-ந்தேதி வரை மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.17238) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல மறுமார்க்கமாக பித்ரகுண்டாவில் இருந்து அதே தேதிகளில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17237) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.
Related Tags :
Next Story