திருச்சி ஜங்ஷன் 8-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்


திருச்சி ஜங்ஷன் 8-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்
x

திருச்சி ஜங்ஷன் 8-வது நடைமேடையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் 8-வது நடைமேடை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. வண்டி எண் 12653 சென்னை எழும்பூர்-திருச்சி ஜங்ஷன் இடையேயான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் வண்டி எண் 22676 திருச்சி ஜங்ஷன்-சென்னை எழும்பூர் இடையேயான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரெயில்கள் தற்போது வரை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் 1-வது நடைமேடையில் கையாளப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த 2 ரெயில்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் 8-வது நடைமேடையில் கையாளப்படும். மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை பரீட்சார்த்த அடிப்படையில் அமலில் இருக்கும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.


Next Story