அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு


அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
x

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள எலக்ட்ரீசியன், பிட்டர், கணினி ஆபரேட்டர் ஆகிய தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட உள்ள மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம், மேம்பட்ட சி.என்.சி. மெஷினிங் டெக்னீஷியன், தொழில்துறை ரோபாட்டிக்ஸ்-டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளிலும் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை வருகிற 16-ந்் தேதி வரை நேரடி சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் சிவகங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர மாணவர்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றவைப்பவர் தொழிற்பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை

நேரடி சேர்க்கைக்கு வரும்போது மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், 5 வண்ண நிழற்படம், ஆதார் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள் தவறாமல் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750, இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும்.

மேலும், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1,000 வழங்க வழிவகை செய்யப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சிகாலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story