ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு
ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நெல்லை,
நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரெயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரெயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரெயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story