பருப்பு வகைகள் இருப்பு வைக்க உச்ச வரம்பு நீட்டிப்பு


பருப்பு வகைகள் இருப்பு வைக்க உச்ச வரம்பு நீட்டிப்பு
x

பருப்பு வகைகள் இருப்பு வைக்க உச்ச வரம்பு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விருதுநகர்

பருப்பு வகைகள் இருப்பு வைக்க உச்ச வரம்பு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொள்முதல்

இதுகுறித்து மத்திய அரசு மேலும் கூறியதாவது:-

2023-2024-ம் நிதியாண்டிற்கான விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, மசூர் பட்டாணி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

துவரம் பருப்பு உற்பத்தியில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் விலை உயரக்கூடும் என்பதால் அரசு இப்பிரச்சினையை கவனத்துடன் கையாளுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் குறைந்தபட்சவிலை திட்டத்தின் கீழ் சந்தை விலைக்கு கீழே குறையும் போது விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் அதிகபட்சமாக 25 சதவீதம் கொள்முதல் செய்யப்படும். இருப்பினும் மாநிலங்கள் கோரினால் இந்த உச்சவரம்பு 40 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இருப்பு உச்சவரம்பு

மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சங்கிலித்தொடர் சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த பருப்பு வகைகளை குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இருப்பு வைத்திருக்க கூடாது என குறிப்பிட்டு துவரம் பருப்பு மற்றும் உளுந்த பருப்புக்கான இருப்பு வரம்பை வருகிற அக்டோபர் இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு 200 டன்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு 5 டன்கள், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கு 5 டன்கள் மற்றும் சங்கிலி தொடர் சில்லறை விற்பனையாளர்களுக்கு 200 டன்கள் ஆகும். தனித்தனியாக ஒவ்வொரு பருப்புக்கும் பொருந்தும். ஆலை உற்பத்தியாளர்களை பொறுத்தவரை உற்பத்தியில் கடைசி 3 மாதங்கள் அல்லது வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதில் 25 சதவீதம் எது அதிகமோ அதனை ஆலை உரிமையாளர்கள் இருப்பு வைக்க வேண்டும்.

ஆய்வு

பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊக்கங்களை தடுக்கவும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு தொடர்பாக நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கவும், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் இருப்பு உச்ச வரம்பை பின்பற்றும் நடவடிக்கையாக வரம்புகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு பகுதியாக பல்வேறு ஆலைகளை ஆய்வு செய்வதின் மூலம் விலைகள் மற்றும் இருப்பின் நிலைமையை கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story