ராமேசுவரம்-ஹீப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


ராமேசுவரம்-ஹீப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

ராமேசுவரம்-ஹீப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் சேவை வருகிற 25-ந் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே, இந்த ரெயில் சேவையை இருமார்க்கங்களிலும் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்ளி-ராமேசுவரம் சிறப்பு ரெயில் வருகிற 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையும், வருகிற 26-ந் தேதியுடன் முடிவடையும் ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் சேவை வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் (வ.எண்.07355) சனிக்கிழமை தோறும் ஹூப்ளியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.07356) ராமநாதபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் ஹவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தவன்கிரி, சிக்சஜூர், பிரூர், அர்சிகரி, தும்கூர், யஷ்வந்த்பூர், பன்சாவாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


Related Tags :
Next Story