கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தகவல்

திருநெல்வேலி

சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கால அவகாசம்

இந்த நிலையில் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.


Next Story