அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு


அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகரில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் நகரில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்து கொள்ள காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் மல்லிகா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும், விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரி மாதம் 29-ந் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இறுதி வாய்ப்பு

இதற்காக கடந்த 4-ந் தேதி அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்திரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story