நெல் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீடிப்பு
நெல் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
நெல் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் சம்பா பருவ பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா பருவ நெல் பயிர் காப்பீடு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க நெல் சம்பா பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதியினை வருகிற 21-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் சம்பா பயிருக்கான பயிர் காப்பீட்டினை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.