சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி வரை நீட்டிப்பு


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி வரை நீட்டிப்பு
x

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டு 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


Next Story