தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 1:00 AM IST (Updated: 15 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பயிற்சி நிலையங்கள்

நாகை மாவட்டம் நாகை, திருக்குவளை, செம்போடை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான கால அவகாசம் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உதவி மையங்கள்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க உதவும் வகையில் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு 8-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும். தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் ஆகியவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை மேற்கண்ட இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story