மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு; 3 பேர் கைது


மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு; 3 பேர் கைது
x

நெல்லை அருகே மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சேரன்மாதேவியை அடுத்த வீரவநல்லூரை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் மதுசூதனன் (வயது 32). இவர் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக படித்து வருகிறார். நேற்று முன்தினம் நெல்லை டவுனை அடுத்த குன்னத்தூர் அய்யனார் கோவில் அருகே மதுசூதனன் வந்தபோது, விளாகத்தை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி (22) மற்றும் 18 வயதுடைய 2 வாலிபர்கள் சேர்ந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம், தங்க மோதிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து உள்ளனர். மேலும் நெட் பேங்கிங் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து தங்களது வங்கி கணக்குக்கு ரூ.80 ஆயிரத்தை மாற்றி உள்ளனர். இதுகுறித்து மதுசூதனன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story