திண்டிவனம் அருகேவாலிபரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திண்டிவனம் அருகேவாலிபரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம்


திண்டிவனம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால் வழங்கப்பட்ட 3 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 21-ந் தேதியன்று இவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், குமாரிடம் நீங்கள் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டுகளில் ரூ.7,716 மதிப்புள்ள ரிவார்ட் பாயிண்ட்ஸ் ரீடிம் செய்யாமல் நிலுவையில் உள்ளது. அதனை ரீடிம் செய்து பணமாக உங்களது சேமிப்பு கணக்கில் திரும்ப பெற்றுக்கொள்ள லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறினார்.

அதன்படி குமார், தனது செல்போனுக்கு வந்த லிங்கினுள் சென்று அந்த நபர் கூறியதை உண்மையென நம்பி, வங்கியிலிருந்து அதிகாரிகள் பேசுவதாக நினைத்து, தான் பயன்படுத்தி வரும் 3 கிரெடிட் கார்டுகளின் 16 இலக்க எண்கள், காலாவதியான தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அந்த நபரிடம் ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார்.

அதன் பிறகு 3 நாட்கள் கழித்து குமாரின் ஒரு கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 9 தவணைகளாக ரூ.70,929-ம், மற்றொரு கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 2 தவணைகளாக ரூ.69,612-ம் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 541-ஐ யாரோ மர்ம நபர்கள் எடுத்துவிட்டதாக அவருடைய செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story