பெயிண்டரை மிரட்டி பணம், நகை பறிப்பு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


பெயிண்டரை மிரட்டி பணம், நகை பறிப்பு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

பெயிண்டரை மிரட்டி பணம், நகை பறித்து சென்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

கூலி தொழிலாளி

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 34), பெயிண்டர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய சூரமங்கலம் ரெயில்வே தரைப்பாலம் அருகே நடந்து சென்றார். அந்த வழியாக சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகபூப் அலி (41) என்பவர் வந்தார்.

பின்னர் திடீரென்று வெங்கடேசை வழிமறித்து கத்தியை காண்பித்து அவரிடம் இருந்து ரூ.500 மற்றும் அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துக்கொண்டு மகபூப் அலி தப்பி சென்றார்.

சிறை தண்டனை

இதுகுறித்து வெங்கடேஷ் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகபூப் அலியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மகபூப் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story