கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு


கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு
x

கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

மதுரை

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு இரவு 11 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதே நாளில் அதிகாலை 3 மணி அளவில் அதே மர்மகும்பல் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த விஜயகுமார்(35) என்பவர் மினி வேனில் ஆவின் பால் இறக்குவதற்கு வந்துள்ளார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை மிரட்டி செல்போனை பறித்து சென்றது. இச்சம்பவம் குறித்து பொன்ராஜ் மற்றும் விஜயகுமார் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழிப்பறி செய்த மர்ம கும்பலை திருமங்கலம் நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story