ரூ.28 லட்சம் கேட்டு மிரட்டல்:தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்கு


ரூ.28 லட்சம் கேட்டு மிரட்டல்:தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்கு
x

ரூ.28 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). இவர், கடந்த 2017-ம் ஆண்டு சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று சரக்கு வாகனம் வாங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்தார். அதற்கு நிதி நிறுவன மேலாளர் ஆனந்தன், சரவணனிடம் பேசி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்படி அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தியவுடன் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தை கொடுத்தனர். ஆனால் வண்டியின் ஆர்.சி.புக் மற்றும் உரிமம் ஆகியவை சரவணனின் பெயருக்கு மாற்றாமல் இருந்தது. இதனிடையே வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் அவரால் கட்டமுடியவில்லை. இதனால் நிதி நிறுவன அதிகாரிகள் 2018-ம் ஆண்டு சரவணன் பயன்படுத்தி வந்த வண்டியை எடுத்து சென்றுவிட்டனர். இதுபற்றி கேட்டபோது, வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.28 லட்சம் செலுத்த வேண்டும் என்று சரவணனை தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தன் மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில், நிதி நிறுவன மேலாளர் கோவிந்தன் மீது இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story