வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு


வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு
x

வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 26). சிலம்ப பயிற்சியாளர். சம்பவத்தன்று இவர் பிள்ளையார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் சுரேந்தரை மறித்து பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென்று சுரேந்தரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் சுரேந்தர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story