குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிவாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிவாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடிமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பகுதிநேர வேலை விஷயமாக பேசினார். அப்போது அந்த நபர், கூகுளில் சென்று சில வாக்கியங்களை டைப் செய்து அதில் வரும் புகைப்படங்களுக்கு ரிவியூ கொடுத்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்று கூறினார்.

அதன்படி பிரபு, ரூ.150-ஐ பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் பிரபுவை தொடர்பு கொண்ட நபர்கள், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்தனர்.

உடனே பிரபு, அந்த லிங்கினுள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்தார். பின்னர் அந்த நபர்கள் கூறியவாறு தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் செயலியில் இருந்து ஐஎம்பிஎஸ் மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு 3 தவணையாக ரூ.95 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் டாஸ்க் முடித்தபோதிலும் பிரபுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து பிரபு, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story