கூட்ட நெரிசலில் பக்தரிடம் பணம் பறிப்பு: 4 பெண்கள் கைது
கூட்ட நெரிசலில் பக்தரிடம் பணம் பறிப்பு: 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருமங்கலத்தைச் சேர்ந்த பக்தர் வரதராஜனிடம் சட்டை பையில் இருந்த ரூ.2500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் வரத ராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அதில் திருச்சி மஞ்சுளாதேவி, லட்சுமி., முத்துலட்சுமி, மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என தெரியவந்தது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பதுங்கிய 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story