சில்லறை மாற்றுவது போல் நடித்து ரூ.2 ஆயிரம் பறிப்பு


சில்லறை மாற்றுவது போல் நடித்து ரூ.2 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சில்லறை மாற்றுவது போல் நடித்து ரூ.2 ஆயிரம் பறிப்பு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியில் லிபு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று ஒரு வாலிபர் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து சில்லறை கேட்டார். லிபு சில்லறை கொடுத்ததும் அதை வங்கி கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுக்காமல் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். உடனே லிபு சத்தம் போட்டார். அப்போது அந்த பகுதியில் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த பேதுரு மகன் சேபிலோன் (வயது30) என்பதும், கூலி தொழிலாளியான இவர் இதுபோல் பலரிடம் சில்லறை மாற்றுவது போல் நடித்த பணத்தை பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சேபிலோனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story