கண்தான விழிப்புணர்வு முகாம்


கண்தான விழிப்புணர்வு முகாம்
x

கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி எஸ்.ஆர்.வி. கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி சேர்மன் வீரணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் செல்வரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் துணைத்தலைவர் பரதீப் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் வைரம் வரவேற்றார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் மாரிச்சாமி, கண்தான மாவட்ட தலைவர் கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானத்தின் விழிப்புணர்வு குறித்து பேசினார். பின்னர் நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் எஸ்.ஆர்.வி. கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரீட்டா ராஜகுமாரி நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story