இலவச கண் சிகிச்சை முகாம்
பிரதமர் நரேந்திர மோடி, ஜனசங்க நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின பிறந்தநாள் சேவைத்திட்ட நாளாக கொண்டாடப்பட்டது. அதன்படி பா.ஜனதா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி ஆலோசனைப்படி தாராபுரம் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பாக மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் காங்கயம்பாளையத்தில் நடைபெற்றது. பா.ஜனதா மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் புரை நீக்கம், கண்களில் சீழ் வடிதல், மாலைக்கண் ஆகியவைகள் குறித்து கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 150 பேர்கள் பரிசோதனை செய்துகொண்டனர். 30 பேர்கள் கண்புரை அறுவைச்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.