பாலக்கோடு பஸ் நிலையத்தில் வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை முகாம்
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி போக்குவரத்து துறை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதற்கு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் போக்குவரத்து பணிமனை மேலாளர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story