மோட்டார் வாகன பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்


மோட்டார் வாகன பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
x

கும்பகோணத்தில் மோட்டார் வாகன பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய 3 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் நவீன கருவிகள் மூலம் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், நீரிழிவு நோய், மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.


Next Story