கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x

சங்கரன்கோவிலில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சங்கர சுப்பையா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகர், சமூக ஆர்வலர்கள் பாட்டத்தூர் பால்ராஜ், சங்கரன்கோவில் பரமசிவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் செலின் மேரி குரியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 74 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.


Next Story