கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் எண்கள். 49, 50, நெல்லை தி ஐ பவுண்டேஷன் மற்றும் தூத்துக்குடி டாக்டர் மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மையம் ஆகியவை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை, நீரழிவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். நெல்லை தி ஐ பவுண்டேஷன் தொடர்பு அதிகாரி சுப்பிரமணியன், விழி ஒளி பரிசோதகர் பிரம்மாச்சி, கண் மருத்துவ ஆலோசகர் ராமலட்சுமி, கணினி பார்வைத் திறன் பரிசோதனையாளர் குமார், டெக்னீசியன் நம்பி, முகாம் மேலாளர் வேலு, தூத்துக்குடி டாக்டர் மோகன்ஸ் நீரழிவு சிறப்பு மைய ஆய்வக நுட்பவியலாளர் உமையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர்கள், மாணவிகளுக்கு நீரழிவு, ரத்த அழுத்த பரிசோதனை, கண் தொடர்பான விழி பரிசோதனை, கண்ணின் பார்வை திறன், கண்ணழுத்த பரிசோதனை பேன்றவற்றை பல்வேறு பரிசோதனைகள் செய்தனர். இதில் பேராசிரியர்கள், 550 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story