அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 250 ஏழைகளுக்கு கண் கண்ணாடிகள்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:-
கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ்குமார், டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கிராமப்புறங்களில் வாழும் 250 ஏழை எளிய பார்வைத்திறன் குறைபாடு உள்ள பொது மக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், ஒன்றிய குழு துணைத்தலைவர் சீனிவாஷ், ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், பிரசாந், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரிமுத்தன், .கிருஷ்ணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story