இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.
நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் முதல் அமைச்சர் முக ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
tamilnilam.tn.gov.in/citizen-ல் பெயர்,செல்போன் எண்,முகவரி,இ-மெயில் முகவரியில் பட்டா மாறுதலுக்கு இனி விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story