கோஷ்டி மோதல்; 4 பேர் காயம்


கோஷ்டி மோதல்; 4 பேர் காயம்
x

கடலூர் அருகே நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் அருகே டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் நேதாஜி (வயது 20). சம்பவத்தன்று இவரது தம்பி அபிஷேக்கும், அதே ஊரை சேர்ந்த கோபிநாதன் தம்பி கோகுலும் கடலூர்- டி.புதுப்பாளையம் பஸ்சில் சென் றனர். அவர்கள் டி.புதுப்பாளையத்தில் இறங்கும் போது, அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் எங்களை பார்த்து ஏண்டா முறைக்கிறாய் என்று கேட்டு தகராறு செய்தனர். இதில் ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் நேதாஜியும், கோபிநாதனும் வெள்ளக்கரை பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டனர். இதை பார்த்த தமிழ்ச்செல்வன், 17 வயது சிறுவன், அவரது நண்பர்கள் வண்டிக்குப்பம் கங்காதுரை, அரசடிக்குப்பம் சத்யராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, நேதாஜி, கோபிநாதனை வழிமறித்து, உங்கள் தம்பிகளை வர சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், 17 வயது சிறுவன், கங்காதுரை, சத்யராஜ் ஆகிய 4 பேரும் நேதாஜி, கோபிநாதன் ஆகிய 2 பேரையும் ஆபாசமாக பேசி கத்தி, கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

8 பேர் மீது வழக்கு

பதிலுக்கு நேதாஜி, கோபிநாதன், 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 4 பேரும் சேர்ந்து தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அவரையும், 17 வயது சிறுவனையும் ஆபாசமாக பேசி தாக்கி, அங்கிருந்த நாற்காலியை உடைத்து மிரட்டினர். இந்த தாக்குதலில் இரு தரப்பை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி நேதாஜி, தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story