விசைப்படகில் மயங்கி விழுந்த முட்டம் மீனவர் சாவு


விசைப்படகில் மயங்கி விழுந்த  முட்டம் மீனவர் சாவு
x

நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது, விசைப்படகில் மயங்கி விழுந்த முட்டம் மீனவர் இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது, விசைப்படகில் மயங்கி விழுந்த முட்டம் மீனவர் இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

முட்டம் மீனவர்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 55). விசைப்படகில் மீன்பிடித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 9-ந் தேதி புரூஸ் என்பவரின் விசைப்படகில் மீன் பிடிக்க முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து ஜஸ்டின் மற்றும் 25 தொழிலாளர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இவர்களது படகு 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சிறுநீர் கழிக்க சென்ற ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார்.

சாவு

உடனே தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படகில் மயங்கி விழுந்து பலியான மீனவர் ஜஸ்டினுக்கு விஜி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story