நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் இன்று திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். இணைச் செயலாளர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் அன்பரசன், தனசேகரன், மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எடையாளர்களுக்கு விற்பனையாளர் பதவி உயர்வும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விற்பனையாளர்களுக்கு அலுவலக எழுத்தர் பதவியும் வழங்கிவிட்டு காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும்.

பணியிட மாற்றம்

20 கிலோமீட்டருக்கு அப்பால் பணிபுரியும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட பணி மாறுதல் கேட்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு அவர்கள் கேட்கும் மாவட்டத்தில் பணி மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

நியாய விலைக் கடை விற்பனையாளர்களின் மாத சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பிடித்தம் செய்யப்பட்ட தொகை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி சங்க அளவிலேயே வைக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். மேலும் பணிக்கொடை லைப் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

தரமான பொருட்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கின் மூலம் நியாய விலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற இனங்கள் 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைவாக நகர்வு செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையிட்டு வழங்கப்படுவதில்லை. சரியான அளவில் எடையிட்டு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நியாய விலை கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story