நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெமிலி அருகே சாலையை விட உயரமாக கால்வாய் கட்டுவதால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கால்வாய் அமைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலம், பல்லூர் வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் சாலை கடந்த 2 வருடங்களாக மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே சிறிய பாலங்கள் மற்றும் சாலையின் இரு பக்கங்களிலும் வடிநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பள்ளூர் ெரயில் நிலையம் அருகே ரோட்டின் ஓரமாக 5 அடி உயரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பொருட்களை காஞ்சீபுரத்திற்கு எடுத்து செல்ல முடியாத சூழல் ஏற்படும். மேலும் மழை காலங்களில் ெரயில்வே சுரங்கபாதையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து தடைபடும் என்று கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
எனவே பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் விரைந்து வந்து பொதுமக்களின் கோரிக்கையினை அமைச்சர் காந்தி கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். ஆய்வாளர் பிள்ளையார், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் தகவல் தெரிவித்து அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் போனில் பேசினார். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று கழிவுநீர் கால்வாய் உயரத்தை குறைத்து தாழ்வாக அமைக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாயின் உயரத்தை குறைப்பதாக உறுதி அளித்தனர்.