போலி மருத்துவர் கைது


போலி மருத்துவர் கைது
x

திருக்குறுங்குடியில் போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கைகாட்டி விலக்கில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர். அந்த பையில் மருந்து பொருட்கள் இருந்ததை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொய்யா மாவடியை சேர்ந்த பால்துரை (வயது 60) என்பதும், சித்த மருத்துவம் படித்து விட்டு சுற்றுவட்டார மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story