புதுக்கோட்டையில் போலி டாக்டர் கைது


புதுக்கோட்டையில் போலி டாக்டர் கைது
x

புதுக்கோட்டையில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவப்பூர் பெரிய தெருவில் மெடிக்கல் நடத்தி வருபவர் சஞ்சய்குமார் சாஜித் (வயது 58). இவர், அந்த பகுதி மக்களுக்கு முறையான மருத்துவ படிப்பு சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் என்பது தெரியவந்தது. அதன் பேரில் சஞ்சய்குமார் சாஜித்தை கைது செய்து, அவரிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story