போளூர் அருகே போலி டாக்டர் கைது


போளூர் அருகே போலி டாக்டர் கைது
x

போளூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

போளூர் அருகே உள்ள வளையகார பேட்டையை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜ சுந்தர் (வயது 48). ஐ.டி.ஐ.வரை படித்துள்ள இவர் சுமார் 5 வருடமாக வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்ததாகவும் ஆங்கில மருத்துவமுறையில் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இது குறித்து போளூர் அரசு மருத்துவமனை உதவி டாக்டர் நாராயணன், போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜசுந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story