திருப்பூரில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு 9 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு 9 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
x

திருப்பூரில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு 9 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு 9 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கிளீனிக்குக்கு 'சீல்'

திருப்பூர் கரட்டாங்காட்டில் செயல்பட்டு வந்த தனியார் கிளீனிக் குறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி திருப்பூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அந்த கிளீனிக்குக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மருத்துவமனை போல் படுக்கைகள், பிரத்யேக வார்டு அமைத்து 24 மணி நேரமும் இயங்கியது தெரியவந்தது. அங்கு செவிலியர்கள் இருந்தனர். டாக்டர் இல்லை.

அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் கடந்த 13-ந் தேதி இரவு கிளீனிக்கை பூட்டி 'சீல்' வைத்தனர். இதையடுத்து கிளீனிக்கை நடத்தி வரும் பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 48) நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.

போலி ஆவணங்கள்

இதைத் தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அண்ணாத்துரை, தான் வைத்திருந்த மருத்துவ படிப்பு ஆவணங்களுடன் ஆஜரானார். அந்த ஆவணங்களை இணை இயக்குனர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆயுர்வேதம் படித்ததாக வைத்திருந்த ஆவணங்கள் போலியானது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு திருப்பூர் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்ததார்.

கைது

இது குறித்து இணை இயக்குனர் கனகராணி கூறியதாவது:-

அண்ணாத்துரை 25 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார். அவரிடம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மட்டுமே உள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவம் பயின்றதைப்போல் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை. ஆனால் புரோக்கர் மூலமாக ரூ.12 லட்சம் கொடுத்து சான்றிதழ் பெற்றதாக கூறினார். இவர் 2014-ம் ஆண்டு இந்த கிளீனிக்கை தொடங்கி நடத்தி வந்துள்ளார். செவிலியர்கள் பணியாற்றியுள்ளனர். மருந்து, மாத்திரைகளை அவரே எழுதிக்கொடுத்துள்ளார். அவர் சிகிச்சை அளித்தது ஆச்சரியமாக உள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக ஆங்கில சிகிச்சை அளித்த அண்ணாத்துரையை போலீசிடம் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலி ஆவணங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை அளித்த அண்ணாத்துரையை தெற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story